அளவற்ற அருளானன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால் ஓதுகிறேன்
ஓர் அடியாரை அவர் தொழுது கொண்டிருக்கும் பொழுது, அவர் நேர்வழியின் மீதிருந்தும் (அவரை தொழவிடாமல் தடுத்தவனை) நீர் பார்த்தீரா? நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கின்றான் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா?
(முஹம்மது தொழுதால் நான் அவர் கழுத்தின் மீது மிதிப்பேன் என அபு ஜஹல் கூறியவாறு) அல்ல (இத்தீய செயலிலிருந்து) அவன் விலகிக் கொள்ளாவிடின், நிச்சயமாக (அவனது) முன்னெற்றி உரோமத்தைப்பிடித்து நாம் இழுப்போம்,
தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி உரோமத்தை.
(அத்தியாயம் - 96 / வசனம்-10,11,14,15,16)


