Tuesday, 29 September 2020

Al-Quran (சூரா அல்-ஹாக்கா, அத்தியாயம் 69, வசனம்/1,2,3,4,5,6,7)

            

          அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புைடயோன்                                          அல்லாஹ்வின்  பெயரால் (ஓதுகிறேன்)


உறுதியாக நடந்தேரக்கூடியதான மறுமை நாளானது, உறுதியாக நடந்தேரக்கூடியது என்ன? உறுதியாக நடந்தேரக்கூடியது என்னவென்று உமக்கு எது அறிவித்தது? ஸமூது கூட்டத்தினரும் ஆது கூட்டத்தினரும்  இதயங்களை திடுக்கிடச்  செய்யக்கூடியதை மறுமை நாளைப் பெய்யாக்கினர்.

ஆகவே ஸாலிஹ் நபியின் கூட்டத்தாராகிய ஸமூது ஒரு பெரிய சப்தத்தைக் கொண்டு அழிக்கப்பட்டனர், இன்னும் ஹூது நபியின் கூட்டத்தாரகிய ஆது பெரும் சப்தத்தோடு கடுங்குளிர் கலந்த கொடுங்காற்றைக் கொண்டு அழிக்கப்பட்டனர். ஏழு இரவுகளும் எட்டு பகல்களும் தொடர்ச்சியாக அவர்கள் மீது அதை அவன் வசப்படுத்தி வீசச் செய்து இருந்தான் ஆகவே நபியே அப்பொழுது நீர் அங்கிருந்திருப்பின் அவற்றில் அக் கூட்டத்தினரை நிச்சயமாக அவர்கள் அடிப்பாகங்களோடு சாய்ந்து கிடக்கும் ஈச்ச மரங்களைப்போன்று பிணங்களாகக் கிடப்பதை நீர் காண்பீர்.

சூரா அல்-ஹாக்கா
(அத்தியாயம் 69, வசனம்/1,2,3,4,5,6,7)



Monday, 28 September 2020

Al- Quran சூரா அத்தஹ்ரு (காலம்) அத்தியாயம் - 76 வசனம் 15,16,17,18,19,20,21,22

 அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புைடயோன்  அல்லாஹ்வின்  பெயரால் (ஓதுகிறேன்)


மேலும் வெள்ளியிலாளான பாத்திரங்களையும், பளிங்கினாலானக் கிண்ணங்களையும் கொண்டு சிறார்களால் அவர்களைச்சுற்றி கொண்டுவரப்படும், வெள்ளியினாலான கிண்ணங்கள், அவற்றை தாகம் தீர்கும் அளவிற்குத்தக்கவாறு அளவாக வளங்கக்கூடிய அவர்கள் நிர்ணயிப்பர், இன்னும் அதில் அவர்கள் குவளையில் மதுபானத்தைப் புகட்டப்படுவார்கள் அதன் கலவை இஞ்சியாக இருக்கும், அங்குள்ள ஓர் ஊற்றிலிருந்து அதனைப்பகட்டப்படுவார்கள் அதற்கு ஸல்ஸபீல் மிக மதுரமான நீர் என்று பெயர் கூறப்படும், மேலும் என்றுமே இளமை மாறமல் இருக்கும் சிறுவர்கள் அவர்களை சுற்றிக் கொண்டே இருப்பார்கள் நபியே அவர்களை நீர் காணுவீரானால் பரத்தப்பட்ட முத்துக்களென அவர்களை எண்ணுவீர்,  

இன்னும் அங்கு நீர் பார்த்தால்  அவற்றின் அருட்கொடைகளையும் பெரிய அரசாட்சியையும் நீர் காண்பீர், அவர்கள் தேகத்தின் மேல் மென்மையான மற்றும் கனமான பச்சை பட்டாடைகள் இருக்கும் இன்னும் அவர்கள் வெள்ளியினால் ஆகிய கடகங்கள்  அணிவிக்கப்பட்டிருப்பார்கள் அவர்களின் இரட்சகன் பரிசுத்தமான ஒரு பானத்தை  அவர்களுக்கு புகட்டுவான், மேலும் அவர்களிடம் நிச்சயமாக இது உங்களுக்குக் கூலியாக இருக்கும் உங்களுடைய முயற்சியும் நன்றிக்குரியதாகி அங்கீகரிக்கப்பட்டு விட்டது என்றும் கூறுவான் .

சூரா அத்தஹ்ரு (காலம்)   அத்தியாயம் - 76 வசனம்  15,16,17,18,19,20,21,22




Friday, 25 September 2020

Al- Quran சூரா அத்தஹ்ரு (காலம்) அத்தியாயம் - 76 வசனம் 12,13,14

 

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புைடயோன்  அல்லாஹ்வின்  பெயரால் (ஓதுகிறேன்)


அன்றியும் அவர்கள் இம்மையில் கஷ்டங்களை சகித்து பொறுமையுடனிருந்ததன் காரணமாக சுவனத்தையும் அணிவதற்குப் பட்டாடையையும் அவர்களுக்கு  அவன் நற்கூலியாக வழங்குகிறான் , 

அவர்கள் அச்சுவனத்தில் ஆசனங்களின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள் அதில் சூரிய வெப்பத்திைனையும் கடுங்குளிரையும் அவர்கள் காணமாட்டார்கள்,

அதன் மரங்களின் நிழல்கள் அவர்கள் மீது  நெருங்கியவையாக இருக்கும் அதன் கனிகள் அவர்கள் பறிப்பதற்கு ஏற்றவாறு தாழ்வாக தாழ்த்தப்பட்டுள்ளது,


சூரா அத்தஹ்ரு (காலம்) 

அத்தியாயம் - 76 வசனம் 12,13,14



Tuesday, 22 September 2020

Al- Quran Sura Al -Qiyamah (அத்தியாயம் 75 வசனம் 16,17,18,19,20,21,26)


Al- Quran Sura Al -Qiyamah (அத்தியாயம் 75  வசனம் 16,17,18,19,20,21,26)

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புைடயோன்  அல்லாஹ்வின்                                             பெயரால் (ஓதுகிறேன்)

 (நபியே வஹீமுலம் அறிவிக்கப்படுபவை தவறிவிடுமோ என பயந்து ) அதற்காக நீர் அவசரப்பட்டு உம் நாவை அசைக்காதீர். (உம் உள்ளத்தில் ) அதனை  ஒன்று சேர்ப்பதும் ,(உமது நாவால் ) அதனை ஓதச்செய்வதும் நிச்சயமாக நம்மீதான கடமையாகும். ஆகவே(ஜிப்ரீல் முலம்) அதனை நாம் (உமக்கு ) ஓதுவோமாயின்,(ஓதப்படும்) அதன் ஓதுதலை நீர் பின் தொடர்ந்து ஓதுவீராக. பின்னர் நிச்சயமாக அதனை தெளிவு செய்வதும் நம்மீதான கடமையாகும்,

 ஏன் இல்லை பின்னர் (மனிதர்களே) நீங்கள் அவசரமானதை (இம்மையை) விரும்புகின்றீர்கள், அன்றியும் மறுமையை நீங்கள் விட்டுவிடுகின்றீர்கள்.(மறுமைநாள் வெகுதுாமென நீங்கள் எண்ணிக்கொண்டிருக்கிறீர்களே) அவ்வாறல்ல (இதோ அதன் தொடக்கமாக மரணவேளையில் அவனது உயிர்) தொண்டை குழியை அடைந்து விட்டால்.

(அத்தியாயம் 75  வசனம் 16,17,18,19,20,21,26)



Monday, 21 September 2020

Al-Quran ( Sura Al - Qiyamah)

 சூறா அல் கியாமா (அத்தியாயம்/75 )


அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புைடயோன்  அல்லாஹ்வின்  பெயரால் (ஓதுகிறேன்)

மனிதன் (இறப்பெய்தி , மண்ணோடு மண்ணாக மக்கிக்போன பின்னர்) அவனுைடய எலும்புகளை நாம் ஒன்று  சேர்க்கவேமாட்டோம் என்று எண்ணுகின்றானா? , ஆம் அவனுடைய விரல்களின் நுனிகளை (முன் பிருந்தது போல் இணைத்துச் சரிப்படுத்தி செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோராக இருக்கிறோம், மாறாக மனிதன் தன் எதிர்காலத்திலும் (பாவத்திலிருந்து விலகிவிடாது ) பாவம் செய்யவே நாடுகிறான், மேலும் மறுமை நாள் எப்பொழுது (வரும்)? என (அதிசயமாக ) அவன்  கேட்கிறான்,

(அத்தியாயம் /75 , வசனம் 3,4,5,6)


Al-Quran (சூரா அல்-முத்தஸ்ஸிர் (அத்தியாயம் / 74 வசனம்38,39,40,41,42,43,44,45,47)

  அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புைடயோன்                                           அல்லாஹ்வின்  பெயரால் (ஓதுகிறேன்) ஒவ்வொரு ஆத்மாவும் தான் சம...